கூவத்தை சுத்தப்படுத்த முடியுமா?

>> Tuesday, December 22, 2009



தமிழக தலைநகர் சென்னையின் நிரந்தர பிரச்சினை களில் ஒன்று அங்கே ஓடும் கூவம் ஆறு. கூவம் என்றதும், அதன் அழுக்கும், அதிலிருந்து வீசும் மூக்கை துளைக்கும் துர்நாற்றமும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

அந்த நிலையை மாற்றப்போவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கூவத்தை சுத்தப்படுத்தி அதில் படகு விடப்போவதாக அறிவிப்புக்களை செய்திருந்தா லும், அவையெல்லாம் வெறும் அறிவிப்புக்களாகவே இருந்தனவே தவிர, அவற்றில் பெரிதாக முன்னேற் றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறி விப்பு உண்மையான பலன் தருமா அல்லது கடந்த கால அறிவிப்புக்களைப்போல செயலாக்கம் பெறா மலே போகுமா என்பதை ஆராயும் பெட்டகம். தயாரித்து வழங்குகிறார் சென்னை செய்தியாளர் டி என்.கோபாலன்.

Read more...

கம்ப்யூட்டர் தகவலை தகர்த்து ஐந்து கோடி ரூபாய் கொள்ளை

"சிட்டி வங்கியில், ஐந்து கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட காரணமாக அமைந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு தகர்ப்பு குறித்து, பெடரல் புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவின் சைபர் குழுவிற்கு தொடர்பிருக்கலாம்' என, அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

"ஹேக்கிங்' என்பது கம்ப்யூட்டர் மென்பொருளில் இருந்து அடிப்படைத் தகவல்களை திருடும் நுண்கலையாகும். இதை இத்துறையில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள் மட்டுமே கையாள முடியும். ஆகவே, ரஷ்யாவில் உள்ள நுணுக்கம் தெரிந்த, "சைபர் குழு' ஈடுபட்டிருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:சிட்டி வங்கியின் முதன்மை நிறுவனமான, சிட்டி குழுமத்தில், அரசுக்கு தற்போது 27 சதவீதம் பங்குகள் உள்ளன. ரஷ்ய வர்த்தக நெட்வொர்க்கில் இருந்து, இணையதள முகவரி மூலமாக, சந்தேகப்படும் வகையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதை, அமெரிக்க முதலீட்டாளர்களே முதலில் கண்டறிந்தனர்.

இதற்கு தேவையான சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை ரஷ்ய குழு ஒன்று விற்பனை செய்கிறது.இவர்கள், பணத்தை கொள்ளையடிப்பதோடு, வங்கி தொடர்பான தகவல்களை அழித்துவிடலாம் என, பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் பிளான்கார்டு என்பவர், யாரோ, சிட்டி வங்கியில் உள்ள தன் கணக்கில் இருந்து, ஐந்து கோடி ரூபாயை திருடியதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த பணம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Read more...

பெண்ணை கொடுமை செய்தவர்களுக்கு காது மற்றும் மூக்கை வெட்ட உத்தரவு


பாகிஸ்தானில் இரு ஆண்களுக்கு அவர்களது மூக்கையும் காதுகளையும் வெட்டி எடுத்துவிடுவது என்ற ஒரு தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவர்கள் இருவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருந்த பெண்ணொருத்தியின் மூக்கையும் காதுகளையும் இவர்கள் வெட்டியிருந்தனர்.


பெண்ணைக் கடத்தி சித்ரவதை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடவர் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற இஸ்லாமிய தண்டனை விதிக்கு ஏற்ப இந்த தீர்ப்பை வழங்குவதாக லாகூர் நகர நீதிபதி கூறியுள்ளார்.


ஆனால் கடந்த காலங்களில் இவ்வகையான தண்டனைகள் மேல்முறையீட்டின்போது மாற்றப்பட்டு வந்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Read more...

கப்பல் பழுது நீக்கம் :28 இந்தியர் தப்பினர்

இன்ஜின் கோளாறால் கடலில் தத்தளித்த 28 இந்தியர்கள் அடங்கிய சரக்குக் கப்பல், பழுது நீக்கப்பட்டு, நேற்று போர்ட்லாந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து அலாஸ்காவில் இருந்து அமெரிக்க கடலோரக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி சீன் டெர்ரி கூறியதாவது:சீனாவில் இருந்து அமெரிக்காவின் போர்ட்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஏ.பி.ஜே.,சூர்யாவீர். இந்த சரக்குக் கப்பலில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறால், அது, அலாஸ்கா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டது. கடலில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக, நிலைமை மிகவும் மோசமானது.இதையடுத்து அவர்கள், அமெரிக்க கடலோரக் காவல் படையின் உதவியை கோரினர். இந்நிலையில், அந்த கப்பலில் இருந்த இன்ஜினியர்கள், அதன் இன்ஜினை உள்ளூர் நேரப்படி, இன்று (நேற்று) காலை 8.20 மணியளவில் சரி செய்தனர். அதன் பின், அந்த கப்பல், போர்ட்லாந்து புறப்பட்டுச் சென்றது.அந்த கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இவ்வாறு சீன் டெர்ரி கூறினார்.

Read more...


புலி ஒன்றை கொன்று, தின்ற குற்றத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு 12 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென் மாகாணமான, யூனானில் தான் மீன் பிடிக்கச் செல்லுகையில், புலி தன்னை தாக்க வந்ததாகவும், தான் தற்பாதுகாப்புக்காக எதிர்த்தாக்குதல் நடத்தியதில் அந்தப் புலி செத்துவிட்டதாகவும் சம்மந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.


கொல்லப்பட்ட புலி, அழிவின் விளிம்பில் இருக்கும், இந்தோசீன வகை புலியினத்தை சேர்ந்த வனத்தில் வாழும் கடைசி புலியாக இருக்கலாம் என்று யூகம் நிலவுகிறது.


புலியின் இறைச்சியை உண்ட குற்றத்திற்காகவும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்ட குற்றத்திற்காகவும் வேறு நான்கு பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

Read more...

வங்க மொழியை ஐ. நாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்கக் கோரிக்கை


வங்க மொழி ஐ நாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்று வங்கதேச அரசு கோரியுள்ளதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை மேற்கு வங்க சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

வங்க மொழி 25 கோடி மக்களால் பேசப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் வசிப்பவர்கள்.


இந்த கோரிக்கையை ஐ நா வுக்கு இந்திய நடுவணரசு அரசு அனுப்ப வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


செப்டம்பர் மாதம் ஐ நாவின் பொதுச் சபையில் பேசுகையில் வங்க மொழியை ஐ நாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வாதிட்டிருந்தார்

Read more...

கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்


கோபன்ஹேகனில் சென்றவாரம் நடந்து முடிந்த காலநிலை மாநாடு ஒரு பெருந்தோல்வி என்று ஸ்வீடன் சுற்றாடல் அமைச்சர் அந்திரியாஸ் கார்ல்க்ரென் வர்ணித்துள்ளார்.


பருவநிலை மாற்றம் தொடர்பில் அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் வந்திறங்கிய கார்ல்ஜென், நிஜமாகவே மாநாடு ஒரு மாபெரும் தோல்வி என்று கூறினார்.


ஐரோப்பிய ஒன்றியமும், உலகின் மற்ற பாகங்களும், இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டு,மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாடு சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருந்தது என்றும் இதில் சிறியதொரு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது என்றும் ஜெர்மன் சுற்றுச்சூழல் அமைச்சர் நொர்பெர்ட் ரொயெட்ஜென் வர்ணித்துள்ளார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP