Showing posts with label தாக்குதல். Show all posts
Showing posts with label தாக்குதல். Show all posts

ஆஸி.யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்

>> Wednesday, January 13, 2010

ஆஸ்ட்ரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் இந்தியரை சிட்னி வாழ் இளைஞர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த இந்தியர் பேசுகையில், “நேற்று சிட்னியில் உள்ள கோகீ கடற்கரைக்கு நேற்று சென்றுள்ளார். அங்கு இருந்த இளைஞர் கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்ததாகவும், தன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்ததாகவும்” பிடிஐ நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தியர் மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை

Read more...

டோகோ கால்பந்தாட்ட வீரர்கள் மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

>> Monday, January 11, 2010


கடந்த வெள்ளிக்கிழமையன்று டோகோ நாட்டு கால்பந்து அணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கோலாவின் அரச கட்டுபாட்டு வானொலி தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த கபிண்டாப் பகுதியில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
இதனிடையே அங்கோலாவில் நடைபெற்றுவரும் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக டோகோ நாட்டு அணி விடுத்த வேண்டுகோளை ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் மூன்று நாள் தேசிய துக்கத்தில் பங்கு பெறுவதற்காக, டோகோ நாட்டு அரசின் உத்தரவுக்கமைய அந்நாட்டு அணி நாடு திரும்பியுள்ளது.
தமது நாட்டின் அணியின் மீது மறைந்திருந்தவர்கள் நடத்திய தாக்குதல் ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டுக்கே ஏற்பட்ட ஒரு வெட்கக்கேடான செயல் என்று டோகோவின் பிரதமர் வர்ணித்துள்ளார்.
தங்களது நாட்டு அணியின் பாதுகாப்பை அங்கோலா அரசு உறுதிசெய்யத் தவறிவிட்டது என்று கூறி அந்நாட்டை டோகோவின் பிரதமர் விமர்சித்துள்ளார்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP