அமெரிக்கா தூதரக அதிகாரிகளை பாக். துன்புறுத்துவதாக புகார்

>> Friday, January 8, 2010

இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்த குற்றச்சாற்றைக் கூறியுள்ளனர்.அமெரிக்க தூத்ரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வெளியில் அவர்களது கார்களை இடைமறித்து, தேவையற்ற விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் வளர்ச்சி திட்டம் ஒன்றை பார்வையிடுவதற்காக பலுசிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாவலர்களும் வழியிலேயே தடுத்து நிறுத்தபட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் அமெரிக்கா அறிவித்த 7.5 பில்லியன் மனிதாபிமான உதவி திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூடுதல் அமெரிக்க பணியாளர்க்ள் தேவைப்படுவதால், அவர்களுக்கான விசா விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே இழுபறி செய்து தாமதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சாற்றியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த பகிரங்க குற்றச்சாற்று இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க இத்தகைய குற்றச்சாற்றைக் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP