நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று

>> Thursday, January 14, 2010

இன்று காலை 11.57 மணிக்குத் துவங்கி மாலை 3.08 மணி வரை நீடிக்கும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரியகிரகணம் முதல் மத்திய ஆப்பிரிக்காவில் 10.44 மணிக்கு துவங்குகிறது.

மத்திய ஆப்பிரிகாவில் துவங்கி சீனாவின் மஞ்சள் கடலில் முடிவடைகிறது. இந்த அதிசய சூரிய கிரகணத்தை ராமேஸ்நரத்தில் உள்ள தனுஷ்கோடியிலிருந்து ஓரளவிற்கு தெளிவாகக் காண முடியும் என்று கூறப்படுகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த நீண்ட நேர கிரகணம் என்பதால் கிரகணத்தின் போது சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பது கண்களுக்கு தீமை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்குரிய கண்ணாடி அணிந்தே பார்க்க வேண்டும். இந்த சூரிய கிரகணத்தின் ஆரம்ப நிலைகளை கன்யாகுமரியில் காணலாம், அதன் பிறாகு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பிறகு கேரளா ஆகிய இடங்களில் காணலாம்.

இறுதியில் வடகிழக்கு மாநிலமான மிஜோரமில் கடைசியாக இறுடித் தருணங்களில் காணலாம்.

மதியம் 1.39 மணிக்கு 50% சதத்திற்கும் மேலாக மறைந்துவிட்ட சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.

இந்த வானியல் அதிசயத்தைக் காண 950 பேர் கொண்ட படகு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளது. மாலத்தீவுகளில் நண்பகல் 12.20 மணிக்கு சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90% சூரியன் மறைந்திருக்கும் இந்த அரிய காட்சியைக் காணவே படகில் சென்றுள்ளனர்.

நெருப்பு வளைய சூரியகிரகணம் எனப்படும் இது யாதெனின், சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வரும் ஆனால் சூரியனின் அளவைக்காட்டிலும் சந்திரன் சிறியது என்பதால் சூரியனின் மேற்புற ஆரம் மட்டும் வெளிச்சமாகத் தெரியும் இதனால் இது நெருப்பு வளைய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

கடைசியாக இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் 1965ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்தது. மீண்டும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் இதனைக் காணமுடியும்.

இதற்கு அடுத்தபடியாக இந்த நெருப்பு வளைய சூரியகிரகணம் 3043ஆம் ஆண்டுதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP