பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது

>> Sunday, January 10, 2010

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகள் இந்து சமய முறைப்படி அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக அவரது உடலை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் அளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் வினோதினி ராஜேந்திரன், கனடாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் தமக்கு இருப்பதால் அதுகுறித்து அதிபருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான அனுமதியை எழுத்து மூலம் தனக்கு வழங்கியிருப்பதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அவரது பிள்ளைகள் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி அதிபர் ராஜபக்சவால் வழங்கப்பட்டிருக்கும்போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகளை பொரள்ளை கனத்தை மயானத்தில் நடத்துவதற்கு ஹோமாகம பதிவாளரும், மரண விசாரணை அதிகாரியும் முதலில் அனுமதி வழங்கியிருந்தனர். எனினும், இந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டு இறுதிக் கிரியைகளை வல்வெட்டித்துறையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், நாளை 10 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை பொது மயானத்தில், வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP