அமெரிக்க விமானங்களை தகர்க்க 20 தற்கொலை படைவீரர்கள்
>> Sunday, January 10, 2010
அமெரிக்க விமானங்களை தகர்க்க தன்னைப் போன்று 20 தற்கொலைப் படை வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக நைஜீரிய தீவிரவாதி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க விமானத்தை தகர்க்க நவீன வெடிகுண்டுகளுடன் வந்த நைஜீரியாவை சேர்ந்த உமர் பாரூக் அப்துல்லா என்ற அல் - காய்தா தீவிரவாதியின் முயற்சி கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.
அந்த தீவிரவாதியை கைது செய்து விசாரணை நடத்தியதில், தன்னைபோன்று மேலும் 20 வீரர்களுக்கு ஏமனில் இதுபோல் விமானத்தை தகர்க்க வெடிகுண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.இதனைத் தொடர்ந்தே அமெரிக்க விமானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more...
