பல்லாயிரம் பேர் பூகம்பத்தில் பலியாகியுள்ள ஹைடியில் மீட்புப் பணிகளில் அமெரிக்கா உதவி

>> Thursday, January 14, 2010


ஹைடியில் செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் சர்வதேச மீட்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அமெரிக்கா அந்நாட்டுக்கு பெருமளவில் படையினரை அனுப்புகிறது.

மூவாயிரத்து ஐநூறு வான் படையினரை அந்நாடு அனுப்புகிறது. இதில் முதல் நூறு பேர் வியாழனன்று ஹைடி செல்கின்றனர்.

இது தவிர விமானம் தாங்கி கப்பல் ஒன்றையும் மேலும் மூன்று கப்பல்களையும் அமெரிக்கா அனுப்புகிறது.

பிற நாடுகளின் மீட்புக் குழுக்கள் - சிறப்பு இயந்திரங்களுடன் ஹைடியின் தலைநகர் போர்த பிரான்சுக்கு வான் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை போதுமானதாக இல்லை என்று அங்கிருக்கும் பிபிசி நிருபர் ஒருவர் உள்ளனர்.

போர்த்-ஓ-பிரன்ஸ் நகருக்குள் சென்றுவருவது எளிதாக இல்லை என்று கூறியுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தொலைதொடர்பு வசதிகள் இயங்குவதாகவும், ஆனால் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிறைந்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரமாக இருக்கலாம் என்று சிலரும் சில லட்சங்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP