குண்டுத் தாக்குதல்கள்: 11 பேருக்கு பாக்தாத் நீதிமன்றம் மரண தண்டனை
>> Thursday, January 14, 2010
இவர்கள் நடத்தியதாக கூறப்படும் குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
வெளிநாட்டவர் மற்றும் நிதியமைச்சகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் மிகத் தீவிரமானவையாக இருந்தன என்பதோடு ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்தன.
தண்டிக்கப்பட்டவர்களில் சிலர் இராக்கின் அல்கயீதா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், மற்றவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்ட இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனின் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் நடந்த நீதிமன்ற நடைமுறைகளின் முடிவில் இந்த தீர்ப்பும் தண்டனையும் அறிவிக்கப்பட்டன.
இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அங்கே இருந்தார்களா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை.
0 comments:
Post a Comment