Showing posts with label உல்ஃபா. Show all posts
Showing posts with label உல்ஃபா. Show all posts

உல்ஃபா தலைவருடன் முஷாரப் ரகசிய சந்திப்பு

>> Sunday, January 10, 2010

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வங்கதேசம் வந்தபோது, உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியாவை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக அந்நாட்டு மூத்த அமைச்சர் அஷ்ரஃபுல் இஸ்லாம் குற்றம் சாற்றியுள்ளார். வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா ஆட்சியிலிருந்தபோது டாக்கா வந்த முஷாரப், உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியா டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை சந்திக்க முஷாரப் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அனுப் சேட்டியா முஷாரப் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக அஷ்ரஃபுல் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டில் கலீதா ஜியாவின் பங்காளதேஷ் தேசிய கட்சி ஆட்சியிலிருந்தபோது, எல்லை தாண்டி ஊடுருவிய குற்றச்சாற்றின்பேரில் உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியா கைது செய்யப்பட்டார்.அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும், இன்னமும் அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

பேச்சுவார்த்தைக்கு உல்ஃபா: கோகாய் நம்பிக்கை

>> Friday, January 8, 2010

அஸ்ஸாம் விடுதலைக்காக போராடிவரும் தீவிரவாத இயக்கமான உல்ஃபா பேச்சுவார்த்தைக்கு வரும் சாத்தியம் உள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கோகாய், “தங்களுடைய கோரிக்கை குறித்து விவாதிக்க அவர்கள் முன்வருவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. விரைவில் எழுத்துப்பூர்வமாக அவர்களின் கோரிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அஸ்ஸாமின் இறையாண்மை தவிர்த்து மற்ற அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் பேசத் தயார் என்று கூறியுள்ள கோகாய், உல்ஃபா அமைப்பின் தலைமைத் தளபதி பரேஷ் பரூவா இல்லாமலேயே பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதெனவும், வேலைவாய்ப்பின்மையே தீவிரவாதம் வளர்வதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.

உல்்பா அமைப்பின் தலைவர் அரபிந்தோ ராஜ்கோவா வங்க தேசத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP