ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம்: சீனா பரிசோதனை வெற்றி

>> Wednesday, January 13, 2010

எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஷின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக” கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
தைவான் தனது நாட்டின் அங்கம் எனக் கூறி வரும் சீனா, அதனை எப்போது வேண்டுமானாலும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பேட்ரியாட் (Patriot) ரக ஏவுகணைகளை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த ஓராண்டுக்கு முன் அளித்த அனுமதியை தற்போது பென்டகன் உறுதி செய்தது. இதனால் தைவான் நாட்டிற்கு பேட்ரியாட் ரக ஏவுகணைகளை அமெரிக்கா எந்தவித தடையுமின்றி விற்பனை செய்ய முடியும். இந்தத் தகவல் வெளியான ஒரு சில மணி நேரத்தில் சீனா ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP