கைப்பற்றப்பட்டது பிரபாகரன் துப்பாக்கி அல்ல: இலங்கை கடற்படை மறுப்பு

>> Sunday, January 10, 2010

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கியை வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்த நிலையில், அதனை அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கியை வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றியதாக கடந்த திங்கட்கிழமையன்று ராணுவம் அறிவித்திருந்தது.
மேற்படி துப்பாக்கி வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டிருந்ததை, தமது தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப்புலித் தலைவர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அதனைக் கைப்பற்றியதாக ராணுவம் கூறியிருந்தது. குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இலங்கை கடற்படை இதனை மறுத்துள்ளது. உண்மையில் அந்த M 16 A 2 துப்பாக்கியானது, கடந்த 1988 ஆம் ஆண்டு பாலம்பட்டாறு, திரிகோணமலையில் கடற்படையினருடன் நடந்த போரில் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதமே அன்றி பிரபாகரனின் ஆயுதம் அல்ல எனக் கூறியுள்ளது கடற்படை.
இராணுவத்தின் அறிக்கையை இவ்வாறு கடற்படையினர் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளனர்.இந்தத் துப்பாக்கி தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்துவருகிறது.தாங்கள் விடுதலைப் புலிகளை சுற்றிவளைத்தபோதும், கடற்படையினர் கவனக்குறைவால் பல விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாக தப்பிச் சென்றதாக சர்சைக்குரிய சில விடயங்களை இராணுவம் தெரிவித்துவருவதும், அதனை கடற்படையினர் நிராகரித்தும் வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP