Showing posts with label ஓட. Show all posts
Showing posts with label ஓட. Show all posts

பாக். இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர் ராணா

>> Friday, January 8, 2010



லஷ்கர் தீவிரவாதி என்ற குற்றச்சாற்றின் பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணா, தாம் பாகிஸ்தான் இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

லஷ்கர் இயக்கத்தின் உத்தரவின் பேரில், இந்தியா உட்பட பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக டேவிட் ஹெட்லி மற்றும் ஹுசேன் ராணா ஆகிய இருவரையும் அமெரிக்கா புலனாய்வு துறையான எப்பிஐ அதிகாரிகள், கடந்த அக்டோபர் மாதம் கைது செய்திருந்தனர்.

இவர்கள் மீதான வழக்கு சிகாகோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில், தம்மை பிணையில் விடக்கோரி ராணா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் தாம் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றியதாகவும், பாதியிலேயே அதைவிட்டுவிட்டு ஓடிவந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தம்மை பிணையில் விடுவித்தால் தம்மால் மீண்டும் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்ல முடியாது என்பதால், தமக்கு பிணை விடுதலை அளிக்குமாறும் அதில் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP