சிகாகோவில் பனிப்புயல்: 500 விமானங்கள் ரத்து
>> Friday, January 8, 2010
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல் தாக்கியதால் அந்த நகரில் இருந்து புறப்பட வேண்டிய 500 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
வடக்கு இல்லினாய்ஸ், வடகிழக்கு இண்டியானா மாகாணங்களுக்கு அமெரிக்க தேசிய வானிலை மையம் இன்று விடுத்துள்ள பனிப்புயல் அபாய எச்சரிக்கை மதியம் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக சிகாகோவில் 8 முதல் 12 இன்ச் உயரம் வரை அனைத்து இடங்களிலும் பனிப் பொழிவு இருந்தது. இதையடுத்து சிகாகோவில் உள்ள ஓஹாரி சர்வதேச விமான நிலையம், மிட்வே விமானநிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 500 உள்ளூர், சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கடுமையான பனிப்பொழிவின் காரணமாக சிகாகோவில் செயல்படும் 150க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment