ஹைடி பூகம்பம்: பெரும் சேதம், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது

>> Wednesday, January 13, 2010


ஹைடியை செவ்வாயன்று தாக்கிய பெரும் பூகம்பம் மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளதாகக் அஞ்சப்படுகிறது.
வீதிகளில் உடல்கள் இறைந்து கிடப்பதையும், கட்டிடங்கள் கூளங்களாகி நொறுங்கிக் கிடப்பதையும் ஹைடி தலைநகர் போர்த்-ஓ-பிரன்ஸிலிருந்து வரும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
கட்டிட இடிபாடுகளிலிருந்து மக்கள் உதவி கேட்டு குரல் எழுப்புவதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஆனால் சிக்கியுள்ளவர்களை மீட்க பெரிய அளவிலான பணி ஏதும் நடந்துவருவதற்கான அறிகுறி எதனையும் அவர்கள் கண்டிருக்கவில்லை.
ஐம்பதாயிரம் ஜனத்தொகை கொண்ட ஹைடியின் ஜக்மெல் என்ற ஊரிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஜக்மேல் நகரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அங்குள்ள ஐ.நா. குழந்தைகள் நிதியமான யூனிசெஃப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP