மேக்கப் போட்ட கற்கால மனிதன்

>> Monday, January 11, 2010

'நியாண்டர்தால்' என்றழைக்கப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன், தன்னை அழகுப்படுத்திக் கொள்ள மேக்கப் போட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கற்கால மனிதன் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருப்பதாகத்தான் நாம் இதுநாள் வரை கற்பனை செய்து வைத்திருந்தோம். ஆனால் அந்த எண்ணத்தை தற்போது நாம் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம்.இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் 'டெய்லி மெயில்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வர்ணம் பூசிக் கொள்வதற்காக கற்கால மனிதன் சிப்பிகளை பயன்படுத்தியுள்ளான். தெற்கு ஸ்பெயினில் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சிப்பிகளில் வண்ணக்கலவை ஒட்டியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ஜோவாவோ ஜில்ஹாவோ கூறுகையில், "இதற்கு முன்னர் ஆப்பிரிக்காவில், கறுப்பு மாங்கனீஸ் குச்சிகளை வர்ணம் பூச பயன்படுத்தியது கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மேக்கப் பொருள்கள் சற்று வித்தியாசமானது.மஞ்சள் நிறக் கலவை மேற்பூச்சாக முதலில் பூசப்பட்டுள்ளன.பின்னர் சிவப்பு பொடியில் பளபளக்கும் கறுப்பு தாதுவை கலந்து பயன்படுத்தியுள்ளனர்.பிரகாசமான வண்ணம் பூசப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட சிப்பிகள் அணிகலன்களாக அணிந்துள்ளனர். இது 10,000 வருடங்களுக்கு முந்தையது" என்றார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP