Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

இந்தியர்கள் பாதுகாப்பு ஆஸி. அரசின் பொறுப்பு - வயலார் ரவி

>> Monday, January 11, 2010

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பே அந்நாட்டு அரசின் கடமைகளில் முன்னுரிமையான ஒன்று என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி குறிப்பிட்டுள்ளார்.இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியர்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு ஆஸ்திரேலியே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் புதுடெல்லியில் பி.டி.ஐக்கு அவர் அளித்த பேட்டியில் கேட்டுக் கொண்டுள்ளார்.அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா எடுக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவில் இந்தியார்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது கவலையளிக்கக்கூடியது என்றும், ஒவ்வொரு இந்தியரின் உயிரும் விலைமதிப்பில்லாதது என்றும் வயலார் ரவி கூறினார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP