ஜம்முவில் ப்ரீபெய்டு இணைப்புகள் மீதான தடை தற்போது நீக்கப்படாது: மத்திய அரசு
>> Friday, January 8, 2010
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு-காஷ்மீரில் ப்ரீபெய்டு மொபைல் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பயங்கரவாதிகள் கைகளுக்கு ப்ரீபெய்டு மொபைல் இணைப்புகள் எளிதாக சென்றடைவதால், ஜம்மு-காஷ்மீரில் அதற்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து விளக்கம் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ்.சௌகான் தலைமையிலான பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், “பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவில் ப்ரீபெய்டு மொபைல் இணைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கு பின்னர் பயங்கரவாத செயல்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. எனவே, தடையை உடனடியாக நீக்க முடியாது” என்றார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment