‘கோப்ரா’ படையின் பெயர் மாற்றப்பட்டது

>> Friday, January 8, 2010

சட்டீஸ்கர் உள்ளிட்ட மத்திய இந்தியாவின் பழங்குடியினர் வாழும் மாவட்டங்களில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படும் கோப்ரா என்றழைக்கப்படும் மத்திய கூடுதல் காவற்படையின் பெயர் சிறப்பு நடவடிக்கைப் படை என்று மாற்றப்பட்டுள்ளது.

‘காமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலியூட் ஆக்ஸன்’ என்பதின் சுறுக்கமே ‘கோப்ரா’ என்பது. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில்தான் இப்பெயர் கொண்ட படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று அரசு கூறினாலும், பழங்குடியினருக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாற்றி வருகின்றன.

நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க இப்படையினர் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகமும் கூறிவருகிறது. இப்படைகள் மேற்கொண்டுவரும் ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ எனும் நடவடிக்கை, வளம் மிகுந்த பகுதிகளில் இருந்து பழங்குடியினரை அடித்து விரட்டவே பயன்படுத்தப்படுகிறது என்று அப்பகுதியில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கோப்ரா என்ற பெயர் அப்பகுதிகளில் கேலியாக சித்தரிக்கப்படுகிறது. மாவோயிஸ்ட்டுகளும் தங்கள் பங்கிற்கு சுவரொட்டிகளை அடித்து, இப்படைகளை குரங்குகள் என்று வர்ணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோப்ரா என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு சிறப்பு நடவடிக்கைப் படை (ஸ்பெஷல் ஆக்சன் ஃபோர்ஸ்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP