சீட்டா வகை சிறுத்தைகளை இந்திய காடுகளில் குடியேற்ற திட்டம்

>> Thursday, January 7, 2010


இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட சீட்டா என்ற ஒரு வகை சிறுத்தைகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகப்படுத்த ''வைல்ட்லைப் டிரஸ்ட் ஆப்''( வன உயிர் காப்பகம்) இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவு நல்கியுள்ளது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ஆனால் ஏற்கனவே நாட்டில் இருக்கும் புலி, யானை, காண்டாமிருகம் போன்ற வன விலங்குகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாத நிலையில், புதிதாக ஒரு மிருகத்தை கொண்டுவருவது தேவையில்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோதனை முறையில் முதலில் ஒரு சில சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு பெரிய அளவிலான திறந்த வெளி தடுப்புப் பகுதிகளில் அவை விடப்படும் என்றும் இம்முயற்சிக்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் வைல்ட் லைப் டிரஸ்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் இராமன் சுகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP