ஆப்கானிஸ்தான் மக்கள் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகக் காட்டுகிறது

>> Monday, January 11, 2010


ரொட்டி விற்கும் ஆப்கானிய வியாபாரிகள்ஆப்கானிஸ்தானில் ஊழலும், வன்செயல்களும் இன்னமும் பெரும் பிரச்சினைக்குரிய விடயங்களாகத் திகழுகின்ற போதிலும், அங்கு நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று, அந்த நாட்டு மக்கள் தமது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருப்பதாக உணர்வதாகவும், மற்றும் தமது எதிர்காலம் குறித்து நல்ல நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளது.
பி.பி.சி., அமெரிக்காவின் ஏ.பி.சி. செய்தி மற்றும் ஜேர்மனியின் ஏஆர்டி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கருத்துக்கணிப்பில், ஆப்கானின் அனைத்து மாகாணங்களில் இருந்தும், 1500 பேரிடம் நேரடியாக கருத்துகள் பெறப்பட்டன.
ஆப்கானிஸ்தான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாக, கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 70 வீதமானவர்கள் கூறியிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டதை விட கணிசமான அளவு அதிகமாகும்.
அதிகாரிகளின் ஊழல் என்பது தமது பகுதிகளில் பெரும் பிரச்சினை என்று 90 வீதமானவர்கள் கூறியுள்ளனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP