உல்ஃபா தலைவருடன் முஷாரப் ரகசிய சந்திப்பு

>> Sunday, January 10, 2010

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வங்கதேசம் வந்தபோது, உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியாவை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக அந்நாட்டு மூத்த அமைச்சர் அஷ்ரஃபுல் இஸ்லாம் குற்றம் சாற்றியுள்ளார். வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா ஆட்சியிலிருந்தபோது டாக்கா வந்த முஷாரப், உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியா டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை சந்திக்க முஷாரப் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அனுப் சேட்டியா முஷாரப் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக அஷ்ரஃபுல் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டில் கலீதா ஜியாவின் பங்காளதேஷ் தேசிய கட்சி ஆட்சியிலிருந்தபோது, எல்லை தாண்டி ஊடுருவிய குற்றச்சாற்றின்பேரில் உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியா கைது செய்யப்பட்டார்.அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும், இன்னமும் அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP