2 ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு

>> Monday, January 11, 2010

இரண்டாம் உலகப்போரின் போது மூழ்கடிக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய மருத்துவக் கப்பல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், 'தி சென்டார்' என்ற ஆஸ்ட்ரேலிய மருத்துவ கப்பலை, ஜப்பான் தாக்கி மூழ்கடித்தது. அந்த கப்பலில் பயணம் செய்த 332 பேர்களில், 64 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.இந்நிலையில் இந்த கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட குழு, அதனை தற்போது கண்டுபிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மோர்தான் தீவிற்கு சுமார் 30 மைல்கள் தொலைவில், குயின்ஸ்லேண்ட் என்னுமிடத்தில் இக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 2 கி.மீ ஆழத்தில் இருந்த சிறப்பு காமிரா, இதனை படம் பிடித்துள்ளது.இதன் மூலம் 66 ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்த கேள்விகளுக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அந்த ஆய்வுக் குழுவின் இயக்குனர் டேவிட் மியர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP