Showing posts with label உயிரிழப்பு. Show all posts
Showing posts with label உயிரிழப்பு. Show all posts

ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் 2009ஆம் ஆண்டே மிக அதிக உயிரிழப்பு: ஐ.நா. அறிக்கை

>> Wednesday, January 13, 2010


ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து மிக அதிக அளவிலான பொதுமக்கள் கடந்த ஆண்டில்தான் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெரும்பான்மையானவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தாலிபான்கள் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா தலைமையிலான நோட்டோ நேசப்படையினரால் ஏற்படும் இழப்புகள் முன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இருந்தும் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 14 சதவீதம் உயர்ந்துள்ளது

Read more...

ஐ.நா. அமைதிப் படையினர் உயிரிழப்பு



ஹைடியில் நடந்த நிலநடுக்கத்தில் ஐநாவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் முற்றாக இடிந்து போய்விட்டது. அங்கு பணியாற்றிய தலைமை அதிகாரியான ஹேடி அன்னாபியும், அவரோடு உடன் பணியாற்றிய பலரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
பிரேசிலும், ஜோர்டானும் அங்கு பணியில் இருந்து தமது நாட்டு படையினர் உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளன. தமது நாட்டை சேர்ந்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது.
பாக்தாத்தில் தனது கட்டிடத்தில் 2003 ஆம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு இதுதான் ஐ.நா. சந்திக்கும் பெரிய சவால் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் நியூயார்க் நகரில் தெரிவித்துள்ளார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP