அஸ்திரா ஏவுகணை வெற்றிகர சோதனை
>> Monday, January 11, 2010
ஆகாயத்தில் இருந்தபடியே எதிரியின் விமான இலக்கினை சென்று தாக்கவல்ல அஸ்திரா ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.ஒரிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் அமைந்துள்ள பாலசூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 9.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த தளத்தின் இயக்குனர் எஸ்.பி. டாஷ் தெரிவித்துள்ளார்.இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.இன்று பிற்பகல்வாக்கில் இதே பகுதியில் இருந்து மீண்டும் ஒரு அஸ்திரா ஏவுகணை சோதிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஏவுகணையானது நேருக்கு நேர் வரும் விமானங்களை 80 கி.மீ தூரத்திலும், முன்னே செல்லும் விமானங்களை 20 கி.மீ தூரத்திலும் கண்டறியும் திறன் கொண்டது.
0 comments:
Post a Comment