மீண்டும் மோட்டார் கார்பந்தய போட்டிகளில் ஷூமாக்கர

>> Wednesday, December 23, 2009


மோட்டர் பந்தய போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றிருந்த ஜெர்மனியின் மோட்டார் கார் பந்தைய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், தான் அடுத்த ஆண்டு பார்முலா ஒன்று போட்டிகளில் மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தான் முன்பு இருந்தது போலவே உறுதியுடன் இருப்பதாகவும் உலக சாம்பியன்ஷிப்பை பெற வேண்டும் என்று குறிவைத்துள்ளதாகவும் ஷிமாக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுபற்றி தன்னிடம் இருந்த ஆவல் மீண்டும் அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஷூமாக்கர் தனது முந்தைய அணித்தலைவர் ராஸ் பிரானுடன் மீண்டும் சேரவுள்ளார்.

இவர்கள் ஏழு உலகப் போட்டிகளை வென்றுள்னர். இதில் ஐந்து பெராரி அணிக்காக பங்கேற்றபோது பெற்ற வெற்றிகளாகும்.

Read more...

இந்திய விசா இந்திய விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள் புதிய விதிமுறைகள


இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள், இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில், நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஸ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம், தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது

Read more...

இரானில் மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு


கடந்த ஞாயிறன்று காலமான இரானின் செல்வாக்கு மிகுந்த, அரசுக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த அதியுயர் மதத்தலைவர்களில் ஒருவரான அயதொல்லா ஹொசைன் அலி மொண்டசாரிக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்த மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளதாக எதிர்க்கட்சியினரின் இணையத்தளங்கள் கூறுகின்றன.

இஸ்ஃபகானில் நடந்த வைபவத்தில் பொதுமக்கள் கலந்துகொள்வதை பாதுகாப்புப் படையினர் தடுத்த போது மோதல்கள் வெடித்ததாக அந்த இணையத்தளங்கள் கூறுகின்றன.

திங்களன்று குவாமில் நடந்த அஞ்சலி நிகழ்வும் இடையூறு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியினரின் போராட்டங்களுக்கான ஆதரவு பல இடங்களுக்கும், முதியவர்கள் மற்றும் மத ரீதியிலான பழமைவாதிகள் மத்தியிலும் பரவுவதாகத் தென்படுவதாக பிபிசியின் தெஹ்ரானுக்கான நிருபர் கூறுகிறார

Read more...

வைரம் கடத்தல் :இந்தியருக்கு தண்டனை

>> Tuesday, December 22, 2009

தென் ஆப்ரிக்க நாடான காங்கோவிலிருந்து இந்தியாவுக்கு வைரங்களை கடத்த முயன்ற இந்திய வியாபாரிக்கு, ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்தவர் அஜூதியா பிரவின்குமார். காங்கோவில் வைர வியாபாரம் செய்து வந்தார். கடந்த பத்தாம் தேதி இந்தியா புறப்பட்ட குமாரிடம், அவரது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது 42 ஆயிரம் காரட் மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஐந்து லட்சம் அமெரிக்க டாலர். இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வைர வியாபாரி குமாருக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதித்து கின்ஷாசா கோர்ட் உத்தரவிட்டது.உலகிலேயே காங்கோ குடியரசில் தான் அதிகப்படியான வைரங்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டில் வைரங்கள் கடத்தப்படுவது மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கூவத்தை சுத்தப்படுத்த முடியுமா?



தமிழக தலைநகர் சென்னையின் நிரந்தர பிரச்சினை களில் ஒன்று அங்கே ஓடும் கூவம் ஆறு. கூவம் என்றதும், அதன் அழுக்கும், அதிலிருந்து வீசும் மூக்கை துளைக்கும் துர்நாற்றமும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

அந்த நிலையை மாற்றப்போவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கூவத்தை சுத்தப்படுத்தி அதில் படகு விடப்போவதாக அறிவிப்புக்களை செய்திருந்தா லும், அவையெல்லாம் வெறும் அறிவிப்புக்களாகவே இருந்தனவே தவிர, அவற்றில் பெரிதாக முன்னேற் றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறி விப்பு உண்மையான பலன் தருமா அல்லது கடந்த கால அறிவிப்புக்களைப்போல செயலாக்கம் பெறா மலே போகுமா என்பதை ஆராயும் பெட்டகம். தயாரித்து வழங்குகிறார் சென்னை செய்தியாளர் டி என்.கோபாலன்.

Read more...

கம்ப்யூட்டர் தகவலை தகர்த்து ஐந்து கோடி ரூபாய் கொள்ளை

"சிட்டி வங்கியில், ஐந்து கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட காரணமாக அமைந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு தகர்ப்பு குறித்து, பெடரல் புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவின் சைபர் குழுவிற்கு தொடர்பிருக்கலாம்' என, அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

"ஹேக்கிங்' என்பது கம்ப்யூட்டர் மென்பொருளில் இருந்து அடிப்படைத் தகவல்களை திருடும் நுண்கலையாகும். இதை இத்துறையில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள் மட்டுமே கையாள முடியும். ஆகவே, ரஷ்யாவில் உள்ள நுணுக்கம் தெரிந்த, "சைபர் குழு' ஈடுபட்டிருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:சிட்டி வங்கியின் முதன்மை நிறுவனமான, சிட்டி குழுமத்தில், அரசுக்கு தற்போது 27 சதவீதம் பங்குகள் உள்ளன. ரஷ்ய வர்த்தக நெட்வொர்க்கில் இருந்து, இணையதள முகவரி மூலமாக, சந்தேகப்படும் வகையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதை, அமெரிக்க முதலீட்டாளர்களே முதலில் கண்டறிந்தனர்.

இதற்கு தேவையான சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை ரஷ்ய குழு ஒன்று விற்பனை செய்கிறது.இவர்கள், பணத்தை கொள்ளையடிப்பதோடு, வங்கி தொடர்பான தகவல்களை அழித்துவிடலாம் என, பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் பிளான்கார்டு என்பவர், யாரோ, சிட்டி வங்கியில் உள்ள தன் கணக்கில் இருந்து, ஐந்து கோடி ரூபாயை திருடியதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த பணம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Read more...

பெண்ணை கொடுமை செய்தவர்களுக்கு காது மற்றும் மூக்கை வெட்ட உத்தரவு


பாகிஸ்தானில் இரு ஆண்களுக்கு அவர்களது மூக்கையும் காதுகளையும் வெட்டி எடுத்துவிடுவது என்ற ஒரு தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவர்கள் இருவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருந்த பெண்ணொருத்தியின் மூக்கையும் காதுகளையும் இவர்கள் வெட்டியிருந்தனர்.


பெண்ணைக் கடத்தி சித்ரவதை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடவர் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற இஸ்லாமிய தண்டனை விதிக்கு ஏற்ப இந்த தீர்ப்பை வழங்குவதாக லாகூர் நகர நீதிபதி கூறியுள்ளார்.


ஆனால் கடந்த காலங்களில் இவ்வகையான தண்டனைகள் மேல்முறையீட்டின்போது மாற்றப்பட்டு வந்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP