"பேராசை"

>> Saturday, October 31, 2009

இறைத்தூதர் அவர்களிடம் நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே! இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும். பேராசையுடன் இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான் (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற மாட்டேன்" என்று கூறினேன். அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) , நூல்:புகாரி
மனிதனுக்கு இரு வெட்ட வெளிகள் பொருள் இருந்த போதிலும் அவன் மூன்றாவதைத் தேடத்துவங்கி விடுவான். மனிதனின் வயிற்றில் மண்ணைத்தவிர (வேறு ஒன்றும்) நிரம்பாது. எவர் (பேராசையை விட்டொழித்து) பாவமன்னிப்பு கோருகிறாரோ அவருடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இவ்வாறு நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
உமர்(ரலி) அறிவித்தார். நபி அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)" என்றார்கள். நூல்: புகாரி
பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி) நூல்:திர்மிதீ
நபி் அவர்கள் கூறினார்கள்' ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.
'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Read more...

தஸ்பீஹ் மணி

>> Friday, October 16, 2009

தஸ்பீஹ் மணி இதனை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர் அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள். ஒரு சிலர் இதனை பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் தஸ்பீஹ் மணிக்கு பதிலாக டிக் டிக்கென்று மிஷினை அழுத்தி கொண்டிருப்பார்கள். மேலும் ஒளு இல்லாமல் தஸ்பீஹ் மணியைத் தொடக்கூடாது என்ற பழக்கமும் உள்ளது. இந்துக்களின் உத்திராட்ச மாலை, கிறிஸ்தவர்களின் ஜபமாலை இருப்பது போன்று முஸ்லிம்களிடம் இந்த தஸ்பீஸ் மணி மிக கண்னியப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம்களும் இதை இஸ்லாமிய நடைமுறைதான் என்று எண்ணியிருக்கிறார்கள். இது நம் நடைமுறைதானா? நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த பழக்கமா என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை.
இன்றைய தஸ்பீஹ் மணியுடைய இடத்தில் கற்களைக் குவித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அன்றைய சில நபித்தோழர்கள் தஸ்பீஸ் செய்ததாக இரு ஹதீஸ்கள் உள்ளன. அவை மிக மிக பலஹீனமானவையாகும். ஆதாரப்பூர்வமான நபிமொழிப்படி இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அநாச்சார (பித்அத்) செயலாகும். அதன் விளக்கத்தை பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்யும்போது தங்களின் வலது கைவிரல்களால் எண்ணுவதை நான் கண்டிருக்கிறேன் என அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், பைஹகீ
இதன் மூலம் நபி(ஸல்) தஸ்பீஹ் செய்ய தனது கை விரல்களையே உபயோகிப்பது தெளிவாகிறது. இதற்குக் காரணம் அல்லாஹ்வும், அவனது ரசூலும் நமக்கு தெளிவாக்குவது கவனிக்கத்தக்கது.
"அந்நாளில் அவர்களின் வாய்கள்மீது முத்திரையிட்டு விடுவோம். மேலும் அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; அவர்களின் கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப்பற்றி சாட்சி சொல்லும்" (அல்குர்ஆன் 36:65)
மேற்படி குர்ஆன் வசனப்படி கைகளும் கால்களும் பேசுமென்றால் நாம் உபயோகிக்கும் தஸ்பீஹ் மணி மட்டும் பேசாதா? என குதர்க்கவாதம் செய்பவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
தஸ்பீஹ் செய்கையில் நீங்கள் விரல்களால் எண்ணுங்கள். ஏனெனில், அந்த விரல்களும் (அல்லாஹ¤வால்) விசாரிக்கப்பட்டு பேச வைக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: அபூதாவூது, ஹாகிம்
அடுத்து சிலர் தஸ்பீஹ் மணியை கண்ணியப்படுத்துவதற்காக கண்ணில் ஒற்றிக்கொள்வதும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் மதிப்பிடுவதற்காக மிஷினை கையில் வைத்து எண்ணிகொள்வதும் நபி வழி அல்ல. மாற்று மதத்தவர்கள் தங்களது ஜபமாலைகளை கண்ணியப்படுத்துவதைக் கண்டு காப்பியடித்த வழக்கமாகும். இவர்கள் கண்ணியப்படுத்தும் தஸ்பீஹ் மணிகளை நமது நபிவழி சஹாபிகள் அவமதித்து இருப்பதை காணலாம்.
நபித்தோழர்களில் பேரறிஞராக கணிக்கப்படும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) ஒரே வழியில் இரு செய்கைகளை கண்ணுற்றார்கள். ஒரு பெண்மணி தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தாள். இதனைக் கண்ட அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) அவர்கள் அதனைப் பிடுங்கி அறுத்தெறிந்தார்கள்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒருவர் சிறிய கற்களைக் குவித்து வைத்து அதன் மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார். அதனைத் தன் காலால் எட்டி உதைத்து விட்டு,
"நீங்கள் நபித்தோழர்களைவிட கல்வியில் மிஞ்சிவிட்டீர்களா? அவர்களைவிட முந்தி விட்டீர்களா? இல்லை! நீங்கள் அனாச்சாரம் (பித்அத்) என்ற வாகனத்திலேயே சவாரி செய்கிறீர்கள்" என வன்மையாகக் கண்டித்தார்கள். இந்த நிகழ்ச்சியை சல்து இப்னு பஹ்ராம்(ரழி) அறிவித்ததாக இமாம் குர்துபீ அவர்கள் தனது 'பித்அத்துகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இப்பழக்கத்தை விட்டொழித்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும்.

Read more...

"ஸலவாத்துன்னாரிய்யா"

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் 'உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது' என்று கேட்டபோது, நபி அவர்கள் 'ஸலவாத்' கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை 'ஸலவாத்' என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய 'ஸலவாத்' களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக 'பித்அத்'ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக 'இப்னு அபீ ஜைது' என்ற அறிஞர் 'வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்' என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து 'அவர் மார்க்கத்தை அறியாதவர்' என்றும் முடிவு கட்டியது. நபி அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது 'புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்' என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். 'திர்மிதி' என்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் 'ஸலவாத்துன்னாரிய்யா' என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.
இந்த 'ஸலவாத்துன்னாரியா' என்ற ஸலவாத்தை நபி அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை. மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட 'ஸலவாத்துன்னாரியா' மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது. இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த 'ஸலவாத்' ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு! இந்த 'தீனை' வைத்து சம்பாதிப்பவர்கள் தான் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானானக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள் அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது. இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'ஸலவாத்துன்னாரிய்யா' வின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண்படுகின்றது.
'கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். (நூல்கள்: புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயிலெ திர்மிதீ) என்ற நபி அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.
இனி ஸலவாத்துன்னாரியாவின் பொருளை பார்ப்போம்
'யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!' இது தான் ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள்.
அல்குர்ஆனையும் நபி மொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்க மாட்டார்கள்! இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.
'நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும்' என்று அல்லாஹ்வோ, அவன் திருத் தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை. 'அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும்' என்று தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போதனை செய்தார்கள்.
'அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே நான் நன்மை செய்து கொள்ளவோ தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லை' என்று சொல்வீராக! (அல்குர்ஆன் 10 :49)
அல்லாஹ் இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சசார வாழ்க்கையில் அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள்! 'தாயிப்' நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க் களத்தில் 'பல்' உடைக்கப்பட்டது! இது போன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.
அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்! தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள்! பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள்! நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இ 'தன் மூலமாகக் கஷ்டங்கள் விலகும்' என்று கூறிடவில்லை.
'தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்' என்ற ஆசை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். 'அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கை சேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்' (அல்குர்ஆன் 18:6) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டும் அளவுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.
அவர்களின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விடவும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்ற போது 'அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன்' என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றன.
(2:272) (3:128) (6:17) (6:50) (6:66) (7:188) (10:106,107) (11:63) (28:56) (42:52) (49:9) (72:21,22)ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்)
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்களை விட்டொழிப்போமாக!
மேலும் அறிந்து கொள்ள
ஸலவாத்

புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது

CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்;ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. 'மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்'; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:'புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்'; (1)ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:'இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்'. (2)
இவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)
1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் 'மனிதனை போன்று' உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது
இதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, 'குரங்கிலிருந்து மனிதன்' வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.
நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், 'மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:
நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.
தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3)நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:
முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. (4)
சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் 'குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு' விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:
மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது. (5)
டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.
ஆய்வில் உதவிய நூற்கள்
(1) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002(2)D.L. Parsell, "Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins", National Geographic News, July 10, 2002(3) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002(4) The Guardian, 11 July 2002(5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. 225

Read more...

முஸ்லிம் தேடும் மனைவி

பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார். நபி அவர்கள் கூறினார்கள்: "நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) (வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்' என்றெல்லாம் நபி அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.) மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி) அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி அவர்களிடம் வந்தார். நபி அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை' என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸயி) ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது. இதனால்தான் நபி அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்) (இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.) அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்களிடம் 'பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?' என கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள், 'கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது) கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள். உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.

Read more...

கருத்து வேறு! தகவல் வேறு!

மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார்

நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடையோரைக் கூட தடுமாற வைக்கும் சாமார்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது! சற்று விரிவாகவே இதை அணுக வேண்டும்.
மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இப்புலன்களின் வழியாகவே பொருட்களை செய்திகளை, உணர அறிய முடிகின்றது, கண்ணால் ஒரு பொருளைக் காண்கிறோம். அதன் பெயரைச் செவி வழியாக அறிகிறோம். அதன் மனம் என்ன என்பதை உணர, மூக்குத்தான் உதவுகிறது. அதன் சுவையை நாவால் உணர்கின்றோம். அதன் மென்மையையும், வன்மையையும் கையால் தொட்டு உணர்கிறோம். இது புலன்களின் தனித்தனி பணி!
பிறவியிலேயே கண்பார்வையற்ற ஒருவன்; ஒரு பொருளின் நிறத்தையோ, உருவத்தையோ அறிய முடியாது. உதாரணமாக “கொக்கு வெண்மையான பறவை” என்று சொன்னால், அவனால் கொக்கையும், வெண்மையையும் உணர முடியாது. அது போல், காது கேட்கும் சக்தியற்ற ஒருவனிடம் ஒரு பொருளைக் காட்டி, அதை ஓசைப்படுத்தினால், அவன் அப்பொருளிலிருந்து வரும் ஓசை இன்னதென்று உணர மாட்டான். மூக்கு பழுதுபட்டு முகர்ந்தறியும் சக்தியற்ற ஒருவன், பொருளின் மனத்தை முகர முடியாது. அது போல் நாவின் நரம்புகள் பழுதுவிட்டு, நாவு மரத்துப் போன ஒருவன், இனிப்பு, கசப்பு போன்ற சுவைகளை உணர முடியாது.
ஆனால், ஒரு கருத்து சரியா? தவறா? என்பதைப் புலன்களால் மட்டும் முடிவெடுக்க இயலாது, ஐந்து புலன்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனா சக்தியினால் மட்டுமே அதை முடிவு செய்ய முடியும். “உலகம் தட்டையானது என்று ஒருவன் சொன்னதாக” நம்பகமான ஒரு நபர் மூலம் செய்தி வரும்பொது, ” அந்த ஒருவன் இப்படிச் சொல்லி இருப்பான்” என்ற செய்தியை - தகவலை நம்புகிறோம் அந்த ஒருவன் சொன்ன கருத்து சரியா என்பதை ஆராய்கிறோம், பின்னர் அந்தக் கருத்து தவறு என்ற முடிவுக்கு வருகிறோம். (இங்கே தகவல் நம்பப்படுகிறது! அது நமக்குச் சொல்கின்ற கருத்து மறுக்கப்படுகிறது)
சிலவற்றை அறிவதற்குரிய ஒரே வழி அந்தந்தப் புலன்கள் மட்டுமே! வேறு வழியே இல்லை! நாவால் ஓசையைக் கேட்கவோ கையால் மணம் முகரவோ, கண்ணால் சுவை அறியவோ இயலாது அல்லது சிந்தனை செய்தும் முடிவெடுக்க முடியாது.
நமது காலத்திற்கு முன் நடந்தவற்றை அறிவதற்குரிய ஒரே வழி செவிப் புலன் தான், உதாரணத்திற்கு மன்னர் “அவ்ரங்கசேப்” என்பவர் ஷாஜஹான் சிறையில் அடைத்தார்” இது ஒரு செய்தி. இதை நம்புவதா? மறுப்பதா? என்ற பிரச்சனை வரும்போது என்ன செய்வது?
ஷாஜஹான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தற்போது நாம் கண்ணால் காண இயலுமா? அல்லது மூக்கால் முகர்ந்து “ஆமாம்! ஷாஜஹான் சிறையில் இருந்தார்” என்று அறிய முடியுமா? கையால் தடவிப் பார்த்தோ, நாவால் சுவைத்தோ இந்தச் செய்தியை அறிய முடியாது. அல்லது சிந்தனையை எல்லாம் செலுத்தி, உள்ளுணர்வால் இதை ஊகித்தும் உணர முடியாது. செவி வழியாகக் கேட்டுக் கேட்டுத்தான் நாம் இந்த தகவலை அறிந்து வைத்திருக்கிறோம். நாம் நேரடியாகப் பார்க்க இயலாத, முகர இயலாத சுவைக்கவும் முடியாத ஒன்றை, சிந்தனைக்கும் எட்டாத ஒன்றை நாம் அறிவது எப்படி? தகவல்களாக செவி வழியாகத்தான் அறியமுடியும்.
ஆக சிந்தனையைச் செலுத்தி முடிவெடுக்க இயன்ற இடங்களில் அதைப் பயன்படுத்துகிறோம். (சிந்தனை சக்தி இருப்பதால்) கேட்டு நம்ப வேண்டிய கடந்த கால நிகழ்ச்சிகளை அந்த அடிப்படைகளை நம்புகிறோம். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதால் அந்த செவிவழிச் செய்தி பலரால் ஒரே விதமாகச் சொல்லப்படும் போது, “அது உண்மைதான்” என்ற நமது நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது. ஆனால் கருத்துக்களைப் பொறுத்தவரை உலகமெல்லாம் சேர்ந்து கொண்டு வேறுவிதமாகச் சொன்னாலும் நாம் ஏற்க மாட்டோம்.
“கொக்கு கறுப்பு” எனறு உலகமே சேர்ந்து சொன்னாலும் “அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்” என்ற தகவலை மட்டுமே நாம் நம்புவோம். அந்தத் தகவல் நமக்குக் கூறுகின்ற கருத்து சரியானதல்ல என்ற முடிவுக்கு நாம் வருவோம். இவ்வாறே குர்ஆன் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய ஒன்று. அதை நாம் செவிப்புலன் மூலமாகத் தவிர வேறு எந்த விதத்திலும் அறிய முடியாது. “இதுதான் குர்ஆன்” என்ற தகவலை முழு உலகமும் சேர்ந்து சொல்லும் போது அதில் நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது.
ஆனால் அவர்களது சொந்த அபிப்பிராயங்கள், கருத்துக்கள், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டால், நாம் ஆராய்கிறோம் மறுக்கிறோம். முரண்படாதிருந்தால் ஏற்கிறோம்.
உதாரணமாக “ஒன்று முதல் ஆயிரம் வரை எண்களைக் கூட்டும் முறை இது என்று என் ஆசிரியர் சொன்னார்” என ஒருவர் நம்மிடம் சொல்கிறார். அவரது நேர்மையில் நம்பிக்கை வைத்து, “அவர் ஆசிரியர் அவருக்குக் கணித முறையைச் சொல்லிக் கொடுத்திருப்பார்” என்று நம்புகிறோம். நம்மிடம் இவ்வாறு சொன்ன அதே நபர் “ஏழும் மூன்றும் பதினொன்று” என்று சொன்னால், (அவர் எவ்வளவு நாணயமானவராக இருந்தாலும்) நாம் ஏற்க மாட்டோம்” உங்கள் ஆசிரியரால் சொல்லித் தரப்பட்ட கணித முறைக்கே உங்கள் கணக்கு முரண்படுகிறதே” என்று அவரிடம் நாம் சொல்வோம். இங்கே அவரது நாணயத்தில் நம்பிக்கை வைத்து அவர் சொன்ன தகவலை நம்பிய நாம், அவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறோம். தகவல்களை நம்புவதற்கு நேர்மை, போதுமானதாக உள்ளது. கருத்துக்களை நம்புவதற்கு நேர்மை உதவுவதில்லை.
நமக்கு சிந்தனா சக்தி இருப்பதால், சிந்தித்து விளங்கக்கூடியவைகளை, சிந்தனையின் மூலமாக மட்டும் நம்புகிறோம். சிந்தனையால் விளங்க முடியாதவைகளை, அவற்றிற்குரிய புலன்களின் துணையால் அறிந்து நம்புகிறோம்.
தகவல்களை முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் நம்புவதால், கருத்துக்களிலும் அவ்வாறே நம்புவோம். இரண்டுக்கும், செவிப்புலன் மட்டுமே எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். கருத்துக்களில் சிந்தனையைச் செலுத்த மாட்டோம் என்று கூறுவோர், “ஏழும், மூன்றும் ஒன்பது” என்று எவராவது சொன்னால் அதையும் நம்பட்டும்! “பூமி தட்டையானது” என்று கடந்த காலத்தில் சொல்லப்பட்டதையும் நம்பட்டும்! “பூமி மாட்டுக் கொம்பின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்ற பாட்டிகளின் கதையையும் நம்பட்டும்! “சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுகின்றது” என்பதையும் நம்பட்டும்! ஏனெனில் அவர்களுக்குத்தான், செவியில் விழுந்து விட்டாலே பொதுமே! உடனே நம்பிவிட வேண்டுமே!
நம்மைப் பொருத்தவரை சிந்தனையைச் செலுத்தி விளங்க முடிகின்றவைகளை சிந்தனையால் விளங்குவோம். சிந்தனையால் முடிவெடுக்க இயலாத கடந்த கால நிகழ்ச்சிகளை செவிப்புலனின் துணை கொண்டு நம்புவோம்; அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால். எதை, எப்பொது பயன்படுத்த வேண்டுமோ அதை அப்போது பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் என் செவி மட்டுமே போதும் என்போர், இப்படிப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, சிந்தனையை மழுங்கச் செய்து கொள்ளட்டும்.
“இதுதான் குர்ஆன்” “இவை தான் ஹதீஸ்கள்” என்ற தகவல்கள் வெறும் செவிப்புலனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற ஒன்று மற்ற புலன்களால் இதை உணர முடியாது. சிந்தனையாலும் ஊகித்து உணர முடியாது.
எனவே முன்னோர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையை வைத்து, அவர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் ஒருமித்து அறிமுகப்படுத்தினார்களோ, அதை நாமும் நம்புகிறோம். வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சியும் செய்கிறோம்.
முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் காலம் காலமாகச் சொன்னார்களோ, அதில் முரண்பாடுகள் எதுவுமில்லாமலிருப்பதை நாம் காணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலத்திலும் கூட அதில் எந்த ஒரு தவறையும் காண முடியவில்லை என்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம். முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று சொன்னார்களோ, அதில் “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் இது போன்ற ஒன்றை இதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்றதையாவது இயற்றிக் காட்டுங்கள்!” என்று சவால் விடப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இன்று வரை எவராலும் அவ்வாறு செய்து காட்டி, குர்ஆனின் சவாலை ஏற்கமுடியவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இவற்றை எல்லாம் காரணமாக வைத்து இது தான் குர்ஆன்” நிச்சயமாக இது மனிதர்களால் இயற்றப்பட்டது அல்ல” என்ற திடமான முடிவு நமக்கு ஏற்பட்டு விடுகின்றது.
“குர்ஆன்” என்று சொல்லி வேறு எதையாவது நம்மிடம், நமது முன்னோர்கள் தந்திருந்தால் அதன் அமைப்பே, அதன் போலித்தன்மையை நமக்குத் தெளிவாக்கி இருக்கும்.
முன்னோர்கள் “இதுதான் குர்ஆன்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ அதை அவர்களின் கூற்றை நம்பி ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல், சிந்தித்துப் பார்க்க முடிகின்ற விதத்தில் சிந்தித்துப் பார்த்தும் உறுதி செய்து கொள்கிறோம்.
அது போல், முன்னோர்கள் “ஹதீஸ்கள்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ, அவற்றையும் செவி வழியாகவே நாம் கேள்வியுற்றோம். ஆனால் “ஹதீஸ்கள்” என்று சொல்லப்படும் அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நாம் ஏற்பதில்லை ஹதீஸ்கள் என்று அறிவிக்கக் கூடியவர்களில் ஒருவர், அல்லது பலர், நம்பகமானவர்களில்லை, பொய் சொல்லக் கூடியவர், நினைவாற்றல் இல்லாதவர்” என்றெல்லாம் முன்னோர்களில் சிலர் அவர்களைச் சந்தேகித்திருக்கும் போது, நாமும் சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்காமல், ஹதீஸ்கள் என்று சொல்லப்படுபவைகளை நாமும் உறுதியாக நம்புகிறோம்.
நாம் எவரையும் பின்பற்றக் கூடாது என்று சொல்வது கருத்துக்கள் பற்றியதே! தகவல்கள் பற்றியது அல்ல.
“காந்தி சுடப்பட்டார்” என்ற செய்தியை நம்முடைய பெற்றோர் வாயிலாகக் கேட்டு நம்புவது தக்லீத் ஆகாது. தகவல்களை அப்படித்தான் நம்ப வேண்டும். அதே பெற்றோர், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதே தக்லீத் எனப்படும். அதுதான் கூடாது. அல்லாஹ் இந்த வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கிக் கொள்ள அருள்செய்வானாக!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP