கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் நீரில் மூழ்கி பலி

>> Friday, January 15, 2010

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆட்டோ கால்வாயில் கவிழ நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மாங்காடு அருகே வசிப்பவர் ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ், இவருக்கு வயது 35. இவரது மனைவி, மாமியார் மற்றும் இன்னும் சில உறவினர் ஆகியோருடன் சரவணன், வேலு என்ற 8 மற்றும் ஒரு வயது சிறார்களும் அடங்கிய குடும்பத்துடன் பட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அதன் பிறகு அனைவரும் அதே ஆட்டோவில் நேற்று இரவு 8 மணிக்கு பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றனர். அப்போது கால்வாய் அருகே சென்ற போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்தது.இதில் 6 பேரும் பலியானார்கள். காலையில் கால்வாயில் ஆட்டோ மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர்.
தீயணைப்புப் படையினர் ஒரே ஒரு உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மீதி 5 பேரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read more...

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய் நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய் நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

கன்னியாகுமரியில் நன்றாகத் தெரியும் கங்கன கிரகணம்


இந்த நூற்றாண்டின் அதிசய நீண்ட நேர சூரிய கிரகணத்தைக் காண கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நிலையில் அங்கு கங்கணம் போட்ட சூரிய கிரகணம் அற்புதமாக தெரிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 108 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் இந்த கிரகணம் தெரிவிதால் பொது மக்கள் இதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.வானில் கண் போன்று தெரிந்த அந்த கங்கண கிரகண வடிவத்தை மக்கள் கண்டு உற்சாகமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரட்னூ, பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகளியில் சிறப்பு தொலைக்காட்சிப் பெட்டிகளை அமைத்து இதனைக்காண சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக தெரிவித்தார். பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டியுடன் நுண்ணோக்கி ஒன்று இணைக்கப்பட்டதனால் கங்கண வடிவம் அபாரமாக தெரிந்தது என்று அதைக்கண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

25 மாநிலங்களிலிருந்து சுமார் 750 மாணவர்கள் இதனைக் காண வந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.மிஜோரம் மாநிலத்தில் 3.15 மணிக்கு கிரகணம் விடுகிறது.

Read more...

இந்திய விளையாட்டுப் பொருட்களில் நச்சு இரசாயனங்கள்


இந்தியாவில் விற்கப்படுகின்ற பல பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கக்கூடிய நச்சு இரசாயனங்கள் உள்ளன என்று இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.
பிளாஸ்டிக்கை மென்மையாக்க உதவும் ப்தாலேட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனம் விளையாட்டு சாமான்கள் உற்பத்தித் துறையினரால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இந்தியாவில் எவ்வித ஒழுங்கு விதியும் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.
இந்தியாவில் விற்கப்பபடும் பலவித விளையாட்டுப் பொருட்களையும் ஆராய்ந்த இந்தக் குழு, அவற்றில் அதிக அளவில் தாலேட்ஸ் இரசாயனம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
கிட்டத்தட்ட பாதியளவிலான விளையாட்டுப் பொருட்களில், சர்வதேச ரீதியில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான இரசாயனம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

Read more...

இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை


செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.
இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.

Read more...

இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை

செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.
இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.

Read more...

நீண்ட சூரிய கிரகணம்




ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய வருடாந்த நீண்ட சூரிய கிரகணத்தை இன்று ஆப்ரிக்க மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளில் காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைத்ததன் விளைவாக, சூரியனின் வெளிவட்டமானது வைர மோதிரம் போல் ஜொலித்தது.
இந்தச் சூரிய கிரகணம் மத்திய ஆப்ரிக்க பகுதியில் முதலில் தெரிய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக இந்தக் கிரகணம் கிழக்கு ஆப்ரிக்கா, தெற்காசியா மற்றும் சீனா என்று நகர்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 11 நிமிடம் அது நீடித்து காணப்பட்டது.
இத்தகையதொரு வருடாந்த சூரியகிரகணம் 3043 ஆம் ஆண்டு வரை மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.

Read more...

ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்


பெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.
அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது.
அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.

Read more...

நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று

>> Thursday, January 14, 2010

இன்று காலை 11.57 மணிக்குத் துவங்கி மாலை 3.08 மணி வரை நீடிக்கும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரியகிரகணம் முதல் மத்திய ஆப்பிரிக்காவில் 10.44 மணிக்கு துவங்குகிறது.

மத்திய ஆப்பிரிகாவில் துவங்கி சீனாவின் மஞ்சள் கடலில் முடிவடைகிறது. இந்த அதிசய சூரிய கிரகணத்தை ராமேஸ்நரத்தில் உள்ள தனுஷ்கோடியிலிருந்து ஓரளவிற்கு தெளிவாகக் காண முடியும் என்று கூறப்படுகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த நீண்ட நேர கிரகணம் என்பதால் கிரகணத்தின் போது சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பது கண்களுக்கு தீமை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்குரிய கண்ணாடி அணிந்தே பார்க்க வேண்டும். இந்த சூரிய கிரகணத்தின் ஆரம்ப நிலைகளை கன்யாகுமரியில் காணலாம், அதன் பிறாகு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பிறகு கேரளா ஆகிய இடங்களில் காணலாம்.

இறுதியில் வடகிழக்கு மாநிலமான மிஜோரமில் கடைசியாக இறுடித் தருணங்களில் காணலாம்.

மதியம் 1.39 மணிக்கு 50% சதத்திற்கும் மேலாக மறைந்துவிட்ட சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.

இந்த வானியல் அதிசயத்தைக் காண 950 பேர் கொண்ட படகு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளது. மாலத்தீவுகளில் நண்பகல் 12.20 மணிக்கு சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90% சூரியன் மறைந்திருக்கும் இந்த அரிய காட்சியைக் காணவே படகில் சென்றுள்ளனர்.

நெருப்பு வளைய சூரியகிரகணம் எனப்படும் இது யாதெனின், சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வரும் ஆனால் சூரியனின் அளவைக்காட்டிலும் சந்திரன் சிறியது என்பதால் சூரியனின் மேற்புற ஆரம் மட்டும் வெளிச்சமாகத் தெரியும் இதனால் இது நெருப்பு வளைய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

கடைசியாக இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் 1965ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்தது. மீண்டும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் இதனைக் காணமுடியும்.

இதற்கு அடுத்தபடியாக இந்த நெருப்பு வளைய சூரியகிரகணம் 3043ஆம் ஆண்டுதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

Read more...

குண்டுத் தாக்குதல்கள்: 11 பேருக்கு பாக்தாத் நீதிமன்றம் மரண தண்டனை


இராக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பல்வேறு வாகன குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருத்து அவற்றை திட்டமிட்டு நடத்திய குற்றங்களின் அடிப்படையில் இராக்கியர்கள் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து பாக்தாத்தில் இருக்கும் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இவர்கள் நடத்தியதாக கூறப்படும் குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

வெளிநாட்டவர் மற்றும் நிதியமைச்சகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் மிகத் தீவிரமானவையாக இருந்தன என்பதோடு ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்தன.

தண்டிக்கப்பட்டவர்களில் சிலர் இராக்கின் அல்கயீதா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், மற்றவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்ட இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனின் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலம் நடந்த நீதிமன்ற நடைமுறைகளின் முடிவில் இந்த தீர்ப்பும் தண்டனையும் அறிவிக்கப்பட்டன.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அங்கே இருந்தார்களா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை.

Read more...

அமெரிக்க தாக்குதலிலிருந்து தாலிபான் தலைவர் 'தப்பினார்'


அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசூத் தப்பி விட்டதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் குறைந்தது தீவிரவாத சந்தேக நபர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானை ஒட்டிய பாகிஸ்தானின் பழங்குடியினர் பிரதேசமான வடக்கு வசிரிஸ்தானில் இருக்கும் பயிற்சி முகாம் என்று கூறப்படும் இடத்தின் மீது இந்த ஏவுகணை தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டது.

தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னதாக தாக்கப்பட்ட இடத்திலிருந்து தங்கள் தலைவர் வேறு இடத்திற்கு சென்றதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பாகிஸ்தான் தாலிபன் அமைப்பின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்திருக்கிறார்.

Read more...

நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற வழங்கப்பட்ட அரசு நிதியைத் திரும்பக் கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டம்


நிதி நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற அரசுக்கு ஏற்பட்ட செலவின் பெரும் பகுதியை வங்கிகளிடம் இருந்து பெரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இது பற்றிய விபரங்கள் சில ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் 117 பில்லியன் டாலர்கள் கட்டம் கட்டமாக பல வருட காலத்தில் திரும்பப் பெருவது என ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

50 பில்லியன் டாலர்களுக்கு மேலான உடைமை வைத்துள்ள வங்கிகள் தமது வரவு செலவு அறிக்கையைப் பொறுத்து தீர்வு ஒன்றை கட்ட வேண்டும்.

அமெரிக்க அரசிடம் நிதி உதவியை திரும்ப கட்டி நிறுவனங்களுக்கும், நிதி உதவியைப் பெறாத நிறுவனங்களுக்கும் கூட இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

Read more...

பல்லாயிரம் பேர் பூகம்பத்தில் பலியாகியுள்ள ஹைடியில் மீட்புப் பணிகளில் அமெரிக்கா உதவி


ஹைடியில் செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் சர்வதேச மீட்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அமெரிக்கா அந்நாட்டுக்கு பெருமளவில் படையினரை அனுப்புகிறது.

மூவாயிரத்து ஐநூறு வான் படையினரை அந்நாடு அனுப்புகிறது. இதில் முதல் நூறு பேர் வியாழனன்று ஹைடி செல்கின்றனர்.

இது தவிர விமானம் தாங்கி கப்பல் ஒன்றையும் மேலும் மூன்று கப்பல்களையும் அமெரிக்கா அனுப்புகிறது.

பிற நாடுகளின் மீட்புக் குழுக்கள் - சிறப்பு இயந்திரங்களுடன் ஹைடியின் தலைநகர் போர்த பிரான்சுக்கு வான் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை போதுமானதாக இல்லை என்று அங்கிருக்கும் பிபிசி நிருபர் ஒருவர் உள்ளனர்.

போர்த்-ஓ-பிரன்ஸ் நகருக்குள் சென்றுவருவது எளிதாக இல்லை என்று கூறியுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தொலைதொடர்பு வசதிகள் இயங்குவதாகவும், ஆனால் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிறைந்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரமாக இருக்கலாம் என்று சிலரும் சில லட்சங்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

Read more...

ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம்: சீனா பரிசோதனை வெற்றி

>> Wednesday, January 13, 2010

எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஷின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக” கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
தைவான் தனது நாட்டின் அங்கம் எனக் கூறி வரும் சீனா, அதனை எப்போது வேண்டுமானாலும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பேட்ரியாட் (Patriot) ரக ஏவுகணைகளை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த ஓராண்டுக்கு முன் அளித்த அனுமதியை தற்போது பென்டகன் உறுதி செய்தது. இதனால் தைவான் நாட்டிற்கு பேட்ரியாட் ரக ஏவுகணைகளை அமெரிக்கா எந்தவித தடையுமின்றி விற்பனை செய்ய முடியும். இந்தத் தகவல் வெளியான ஒரு சில மணி நேரத்தில் சீனா ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Read more...

ஆஸி.யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்

ஆஸ்ட்ரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் இந்தியரை சிட்னி வாழ் இளைஞர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த இந்தியர் பேசுகையில், “நேற்று சிட்னியில் உள்ள கோகீ கடற்கரைக்கு நேற்று சென்றுள்ளார். அங்கு இருந்த இளைஞர் கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்ததாகவும், தன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்ததாகவும்” பிடிஐ நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தியர் மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை

Read more...

அணு ஆயுத திட்டப் பணிகளை கைவிடும் எண்ணமில்லை: பாகிஸ்தான்

அணு ஆயுதப் திட்டப் பணிகளை முழுமையாகக் கைவிடும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காக குறைந்தபட்ச அணு ஆயுதத் திறன் தொழில்நுட்பத்தை தொடர்ந்து பாதுகாப்போம் எனக் கூறியுள்ளது.பாகிஸ்தான் தேசிய சபையில் “பாகிஸ்தானின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் புதிய சட்ட மசோதா இன்று கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பாபர் அவான், “பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் அணு ஆயுத திட்டப் பணிகளை துவக்கியது. எனவே, அதனை கைவிடுவது அல்லது மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொறுப்புள்ள இஸ்லாமிய அணு வல்லமை படைத்த நாடு என்ற ரீதியில் குறைந்தளவு அணு ஆயுத தொழில்நுட்பத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்.
பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவின் மீது அரசு விவாதம் நடத்த தயாராக உள்ளது” என்றார்.

Read more...

பள்ளி வாகனம் மீது ரயில் மோதல்: பாகிஸ்தானில் 8 குழந்தைகள் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பஞ்சாப் மாகாணத்தின் மியன் சன்னு பகுதியில் இன்று காலை ஆளில்லாத ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதியது. பனி மூட்டம் காரணமாக ரயில் வருவதை வாகன ஓட்டுனர் கவனிக்கவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 குழந்தைகள், ஓட்டுனர் என 9 பேர் பலியாகியிருக்கலாம் என்றும், 12 குழந்தைகள் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்


சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி செய்வதன் மூலம், கூகுள் சீனாவில் இருந்து வெளியேற நேரிடலாம்.
கூகுள் அளிக்கும் இணைய சேவையின் சில வசதிகளை பயன்படுத்தி சீன அரசு தனது அதிருப்தியாளர்களைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என்று கூகுள் கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, பீஜிங்கில் உள்ள கூகுள் அலுவலகத்துக்கு சீன குடிமக்கள் குழு ஒன்று மலர் கொத்துக்களுடன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேநேரம் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன.
கூகுள் அவ நம்பிக்கையுடனும் முட்டாள்தனமாகவும் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக கூகுளிடம் கூடுதல் விபரங்கள் கோரியுள்ளதாக சீன அரசு கூறியுள்ளது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP